"வதந்தி 2" வெப் தொடரில் இரண்டு கதாநாயகிகளா?


வதந்தி 2 வெப் தொடரில் இரண்டு கதாநாயகிகளா?
x
தினத்தந்தி 21 Aug 2025 9:34 AM IST (Updated: 21 Aug 2025 3:43 PM IST)
t-max-icont-min-icon

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் 'வதந்தி'. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து வதந்தி தொடரின் 2ம் பாகத்தை இயக்கி வருகின்றனர். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்து, தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த தொடரில் 2 கதாநாயகிகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சசிகுமாருக்கு ஜோடியாக பீஸ்ட், டாடா போன்ற படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும், இந்த வெப் தொடரில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நட்பே துணை படத்தில் நடித்த அனகா நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த வெப் தொடர் அடுத்த வருடத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story