அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

வருகிற 12ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
Published on

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ரவி.ஜி, உத்ரா உன்னி கிருஷ்ணன் குரலில் வெளியான 'கண்ணே செல்ல கண்ணே' பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டது. மேலும், வருகிற 12ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com