மோகன்லாலின் `திரிஷ்யம் 3' திரைப்படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்

மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மோகன்லாலின் `திரிஷ்யம் 3' திரைப்படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
Published on

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு 'திரிஷ்யம் 2' வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 'திரிஷ்யம்' 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் , இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்தது. இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் "யு/ஏ" சான்றிதழ் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தை 13வயத்திற்கும் மேற்பட்டோர் தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com