விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

'மகாராஜா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்
Published on

சென்னை,

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'மகாராஜா' படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 'மகாராஜா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com