குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ்

நடிகை குஷ்பு அரண்மனை 3 என்ற பேய் படத்தை தயாரித்து உள்ளார். இது ஏற்கனவே வெளியாகி வசூல் குவித்த அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக தயாராகி உள்ளது.
குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ்
Published on

இதில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷிகன்னா, விவேக், யோகிபாபு, மனோபாலா, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சுந்தர்.சி இயக்கி உள்ளார்.இதன் படப்பிடிப்பை கடந்த வருடமே முடித்து கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில் அரண்மனை 3 படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை பார்த்து விட்டு யு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதுடன் குடும்பம், நகைச்சுவை, பொழுதுபோக்கு, ரகளையோடு படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளார். மறைந்த நடிகர் விவேக் முழுவதுமாக நடித்து முடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெற்றி பெற குஷ்புவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com