யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கி அமீரக அரசு கவுரவம்...!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கி அமீரக அரசு கவுரவித்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கி அமீரக அரசு கவுரவம்...!
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்த நிலையில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரசு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com