அமீரக அரசு கவுரவம்... நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா

துபாய் சென்ற விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு இந்த விசாவை வழங்கினர்.
அமீரக அரசு கவுரவம்... நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா
Published on

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசு தற்போது கோல்டன் விசா வழங்கி உள்ளது. துபாய் சென்ற விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு இந்த விசாவை வழங்கினர். இதுபோல் சமீபத்தில் திருமணமாகி துபாயில் குடியேறி உள்ள நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவரும், தொழில் அதிபருமான ஷானித் ஆசிப் ஆகியோரும் கோல்டன் விசா பெற்றுள்ளனர். ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com