

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் `கண்ணை நம்பாதே'. இதில் நாயகியாக ஆத்மிகா வருகிறார். பிரசன்னா, ஶ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மு.மாறன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``ஏற்கனவே அருள்நிதியை வைத்து `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கினேன். இந்தப் படத்தை எம்.ஜி.ஆரின் `நினைத்ததை முடிப்பவன்' பட பாடலில் இருந்து எடுத்து உருவாக்கி உள்ளேன். கதைக்கும் தலைப்புக்கும் தொடர்பு இருக்கும். பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டு உள்ளன. இடைவேளைக்கு பிந்தைய கதை ஒரே நாளில் நடக்கும். கொலையைச் சுற்றி கிரைம் திரில்லர் கதையாக தயாராகி உள்ளது. இதில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். கிராபிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் உதயநிதி ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அதில் இருந்து மீண்டு எப்படி வெளியே வருகிறார் என்பது கதை'' என்றார்.