உதயா நடித்த "அக்யூஸ்ட்" படத்தின் டிரெய்லர் வெளியானது

பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகர் உதயா நடித்துள்ளார்.
Published on

சென்னை,

கன்னட இயக்குனரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் 'அக்யூஸ்ட்'. இந்த படத்தில் 'திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், இசையை நரேன் பாலகுமார் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவாக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடித்துள்ளார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.

இந்நிலையில் உதயா நடித்த 'அக்யூஸ்ட்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக டிரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com