உதயநிதியின் 'கலகத் தலைவன்' டிரைலர் வெளியீடு...!

'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
உதயநிதியின் 'கலகத் தலைவன்' டிரைலர் வெளியீடு...!
Published on

சென்னை,

'மீகாமன்', 'தடம்' போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கலகத் தலைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் 'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com