'மார்கழி திங்கள்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள 'மார்கழி திங்கள்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
'மார்கழி திங்கள்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பள்ளி பருவத்து காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 'உன் இதழ்களினால்' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இளையராஜா எழுதியுள்ள இந்த பாடலை அனன்யா பட் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மார்கழி திங்கள்' திரைப்படம் வருகிற அக்டோபர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com