எல்லை மீறாத கவர்ச்சி நல்லது தான் - ரகுல் பிரீத் சிங்

திறமையை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ரகுல் பிரீத் சிங்
கோப்புப்படம்
Published on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக பட விழாக்களில் அதீத கவர்ச்சி காட்டி அனைவரையுமே திக்குமுக்காட வைக்கிறார். திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் அவர் கலக்குவது வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இது குறித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, "கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு அங்கம் தான். எல்லை மீறாத அளவு கவர்ச்சி நல்லது தான். இங்கு கவர்ச்சி என்பதை தவறாக பார்க்கும் கோணம் மாறிவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். திருமணம் என்பது நடிகைகளின் வாழ்க்கையில் தடையாகி விடாது. திறமையை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. நல்ல புரிதல் இங்கு எல்லாவற்றையும் மாற்றிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com