'ஹிட் 3-யை மார்கோவுடன் ஒப்பிடும் ரசிகர்கள் - உன்னி முகுந்தன் கொடுத்த பதில்

ஹிட் 3-ல் உள்ள வன்முறை ஆக்சன் காட்சிகள் மார்கோவை நினைவு படுத்தியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஹிட் 3' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நானியின் அற்புதமான நடிப்பும், படத்தின் இறுக்கமான கதைசொல்லலும் மக்களை ஈர்த்திருக்கின்றன.
ஹிட் 3-ல் உள்ள வன்முறை ஆக்சன் காட்சிகள் மார்கோவை நினைவு படுத்தியதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'ஹிட் 3' -யை மார்கோவுடன் ஒப்பிடுவது குறித்த கேள்விக்கு உன்னி முகுந்தன் பதிலளித்தார். அவர் கூறுகையில்,
"நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் மார்கோவுடன் ஒப்பிடப்படுவது மகிழ்ச்சி. இருப்பினும் ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். நான் நானியின் மிகப்பெரிய ரசிகன். பாக்ஸ் ஆபீஸில் மார்கோவை விட இது இன்னும் சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்' என்றார்.
Related Tags :
Next Story






