குற்றச்சாட்டிற்கு உன்னி முகுந்தன் பதில்


Unni Mukundan breaks silence on assault allegations
x

உன்னி முகுந்தன் தன்னை, தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விபின் என்பவர் சமீபத்தில் புகார் அளித்தார்.

சென்னை,

மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தனது மேலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டோவினோ தாமஸின் 'நரிவேட்டை' படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் உன்னி முகுந்தன் தன்னை, தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி விபின் என்பவர் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் இணையத்தில் விரைவாக கவனத்தை ஈர்க்க, பல்வேறு விமர்சனங்களைத் தூண்டியது. இந்நிலையில், விபினின் குற்றச்சாட்டிற்கு உன்னி முகுந்தன் பதிலளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், ' கடந்த 2018-ம் ஆண்டு நான் என்னுடைய சொந்த தயாரிப்பில் முதல் படத்தைத் தயாரிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது, விபின் குமார் என்னைத் தொடர்பு கொண்டார். விபின் குமாரை என்னுடைய தனிப்பட்ட மேலாளராக நான் ஒருபோதும் நியமிக்கவில்லை. அவரால் எனக்கு பல பிரச்சினைகள் வந்தன.

அவர் மீது நான் எந்த தாக்குதலும் நடத்தவில்லை. அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. என் மீது விபின் குமார் சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை' என்று தெரிவித்திருக்கிறார்.




1 More update

Next Story