கட்டுக்கடங்காத கூட்டம்; சிக்கி கொண்ட நடிகை போலீசார் தடியடி

ஜார்க்கண்டில் போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போலீசார் தடியடி நடத்தினர்
கட்டுக்கடங்காத கூட்டம்; சிக்கி கொண்ட நடிகை போலீசார் தடியடி
Published on

கர்வா

பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங். இவர் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார்.

ஆனால் உரைக்கு முன்னதாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டமாக அவரை திணறடித்தனர். இதனால் அவர் கூட்டத்திற்குள் சிக்கி கொண்டார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதல் பலர் காயம் அடைந்ததனர்.

இதனால் கோபமடைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் நாற்காலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த அக்ஷரா சிங் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளீயாகி உள்ளன.

முதல் மந்திரி மக்கள் மத்தியில் உரையாற்றிய பிறகு, அந்த மேடையில் அக்ஷரா சிங் மற்றும் மற்றொரு நடிகை நிஷா சிங் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com