சத்யராஜ் மடியில் அமர்ந்திருக்கும் 'புஷ்பா' பட நடிகர் - புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் பகத் பாசில்.
image courtecy:instagram@fahadhfaasil_universe
image courtecy:instagram@fahadhfaasil_universe
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள பிரபல நடிகர் சத்யராஜ். இந்நிலையில், இவரின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அந்த குழந்தை தற்போது தென்னிந்திய சினிமாவை  கலக்கி வரும் பிரபல நடிகர் என்று தெரிய வந்துள்ளது. அவர்தான் புஷ்பா படத்தில் நடித்திருந்த பகத் பாசில். மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் பகத் பாசில்.

மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய பாசில், மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். முன்னதாக தமிழில் வெளியான சத்யராஜின், என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதோ ஒரு செட்டில் சத்யராஜ் மடியில் பகத் பாசில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பகத் பாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com