மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும் -கமல்ஹாசன்

மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும் என கமல்ஹாசன் கூறினார். #KamalPartyLaunch #MakkalNeedhiMaiam #KamalHaasan
மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும் -கமல்ஹாசன்
Published on

சென்னை

சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு, உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் வழங்கினார். மக்கள் நீதி மய்யத்தின் 32 மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கினார்.

பின்னர் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அப்போது பேசிய கமல் கூறியதாவது:-

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு? எதிர்க்காலத்தை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும்.

அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அமைச்சர்களின் பிள்ளைகள், அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். மாற்றங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்தே துவங்க வேண்டும். தவறுகள் எல்லா அரசிலும் நிகழும்; நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.

மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும். நீங்கள் என்னை தலைவர் என்று அழைக்க வேண்டாம். நான் உங்களை தலைவா என்று அழைக்க வேண்டும். நீங்கள் என்னிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கமல் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com