விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்!

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், "தேரே இஸ்க் மெய்ன்" என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தை உள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இயக்குனர் விக்னேஷ் ராஜா இதற்குமுன் இயக்கிய படம் 'போர் தொழில்', இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற தகவல் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com