ஜீவா நடித்துள்ள 'பிளாக்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்

திரில்லர் கதையில் உருவாகியுள்ள 'பிளாக்' படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜீவா நடித்துள்ள 'பிளாக்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.

இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பிளாக் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com