பிரசாந்தின் 'வின்னர் 2' படத்தின் அப்டேட்

சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான 'வின்னர்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரசாந்தின் 'வின்னர் 2' படத்தின் அப்டேட்
Published on

சென்னை,

'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த படம் 'வின்னர்'. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் உருவாகும் என பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் படம் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு சமீபத்தில் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com