சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய படத்தின் அப்டேட்!

நடிகர் சிம்பு 'பார்க்கிங்' பட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய படத்தின் அப்டேட்!
Published on

சென்னை,

நடிகர் சிம்புவிற்கு 'மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல' என 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது சிம்பு 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது.

இதற்கிடையில்,நடிகர் சிம்பு அடுத்ததாக ஹரிஸ் கல்யான் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு சிம்புவின் பிறந்தநாளன்று பிப்ரவரி 3-ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com