வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தின் முக்கிய தகவல்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தின் முக்கிய தகவல்
Published on

சென்னை,

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது விடுதலை படத்தின் 2 -ம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க திட்மிட்டிருந்தார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமால் தாமதமாகி கொண்ட போனது. தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், 'விடுதலை' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தமிழ் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், வெற்றி மாறன் இயக்கும் மற்றொரு புதிய படமான கார்த்தியின் படத்திற்கும், வாடிவாசல் படத்திற்கும் ரிலீஸ் தேதிகளில் எந்தவிதமான பிரச்சினைகளையும் வராது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com