ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் `சீன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் “சீன்” படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் `சீன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on: 

சென்னை,

‘சீன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடல் இன்று (அக்டோபர் 8) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாடலின் வெளியீட்டை சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சூர்யா 47

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

நவம்பர் 6-ந்தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதல் பாடல் இன்று வெளியீடு

இந்த நிலையில், ‘சீன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடல் இன்று (அக்டோபர் 8) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாடலின் வெளியீட்டை சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com