கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர்.
கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் "லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்" என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தவர் கவின். தற்போது இவர் , லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com