வைர ஆடையுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாலிவுட் நடிகை - வைரலாகும் வீடியோ

நேற்று நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார்
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு அனில் சர்மா இயக்கத்தில் வெளியான 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் இவர் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டாகு மகாராஜ்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.
நேற்று ஊர்வசி தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது அவர் வைரத்தால் ஆன ஆடையை அணிந்திருந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Related Tags :
Next Story






