

இந்தி சினிமாவில் அறிமுகமானாலும், கன்னடம், பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் ஊர்வசி ரவுடேலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி கவனம் ஈர்த்து வரும் அவர், தற்போது தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவரது பிறந்தநாளுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஏழு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கேக் காணப்படுகிறது. முழுவதும் சாக்லெட் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேக்கில் ஆங்காங்கே வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூ.16 கோடி என கூறப்படுகிறது.
கேக்கின் மேல் பதிக்கப்பட்டிருந்தவை உண்மையான வைரங்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும், அதன் ஆடம்பர வடிவமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.