“உஸ்தாத் பகத் சிங்”...முதல் பாடல் அப்டேட் கொடுத்த இயக்குனர்

இப்படத்தில் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
Ustaad Bhagat Singh: Harish Shankar gives first song update
Published on

சென்னை,

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படம் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் ஹரிஷ் சங்கர் பகிர்ந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான கப்பர் சிங் படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இது.

அல்லரி நரேஷின் 12ஏ ரெயில்வே காலனி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் பேசிய ஹரிஷ் சங்கர், படத்தின் முதல் சிங்கிள் குறித்து பேசினார். முதல் பாடல் டிசம்பரில் வெளியாகும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

உஸ்தாத் பகத் சிங் படத்தில் பவன் கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் கோடை விடுமுறை காலத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com