ஆஷிகா ரங்கநாத்தின் ’பிஎம்டபிள்யூ’...கவனம் ஈர்க்கும் 3-வது பாடல்


Vaammo Vaayyo: Massy triangle song from BMW
x

இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் ரவி தேஜா கடைசியாக பானு போகவரபு இயக்கிய மாஸ் ஜதாராவில் நடித்தார். அந்தப் படம் பலரும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, இப்போது அவர் தனது முழு கவனத்தையும் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் தனது அடுத்த படமான ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ (பிஎம்டபிள்யூ) செலுத்தியுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை சுதாகர் செருகுரி தயாரிக்க பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 3-வது பாடல் 'வாம்மா வாயோ' வெளியாகி இருக்கிறது

ரவி தேஜாவின் படங்கள் சில காலமாக பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை. இப்படம் அவருக்கு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

1 More update

Next Story