

போபால்,
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபல நடிகர், நடிகைகள் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், நடிகைகள் ராசி கன்னாவும், வாணி கபூரும் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, 'ஜெய் மகாகாலேஸ்வரர்' என்று பதிவிட்டுள்ளார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை ராசி கன்னா கூறுகையில், ஜெய் ஸ்ரீ மகாகாலேஸ்வரர். மகிழ்ச்சியாக உணர்ந்தேன். உண்மையில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக உணர்ந்தோம். மகாகாலேஸ்வரர் எங்களை மீண்டும் அழைப்பார் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.
View this post on Instagram