தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் தனுஷ் நடிக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!
Published on

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் நாளை தன்னுடைய 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'வாத்தி' திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்திலிருந்து 'பழம்' என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com