வெளியானது ' வாழ 2' பட கிளிம்ப்ஸ்...வைரல்


Vaazha 2 glimpse out
x
தினத்தந்தி 16 Aug 2025 5:45 PM IST (Updated: 16 Aug 2025 5:45 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் வாழ.

சென்னை,

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'வாழ'. இப்படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக ''ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'', ''குருவாயூர் அம்பல நடையில்'' உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.

சவின் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக விபின் தாஸ் அறிவித்திருந்தார்.

இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ''வாழ'' படம் வெளியாகி 1 வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ''வாழ 2'' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story