வாழை திரைப்படம்: இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கம்

வாழை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
வாழை திரைப்படம்: இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கம்
Published on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. வாழை திரைப்படம் இன்று வெளியாகிறது.

இந்த நிலையில், வாழை திரைப்படம் இன்று திரைக்கு வரும் நிலையில், அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் "அனைவருக்கும் அன்பின் வணக்கம். இன்று என் நான்காவது திரைப்படமான 'வாழை' வெளியாகிறது. வாழையில் என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com