வாச்சாத்தி உண்மை சம்பவம் படமாகிறது - ரோகிணி இயக்குகிறார்

வாச்சாத்தி உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுக்க போவதாக நடிகையும், இயக்குனருமான ரோகிணி தெரிவித்துள்ளார்.
வாச்சாத்தி உண்மை சம்பவம் படமாகிறது - ரோகிணி இயக்குகிறார்
Published on

தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி உண்மை சம்பவம் திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது.

சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடிய தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வாச்சாத்தி என்ற கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறை, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 18 இளம்பெண்களை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வன்முறை வெறியாட்டம் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் வாச்சாத்தி உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுக்க போவதாக நடிகையும், இயக்குனருமான ரோகிணி தெரிவித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜிமோலும், ரோகிணியும் நடிக்கிறார்கள். லிஜிமோல் 'ஜெய்பீம்' படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்துக்கு ஆதவன் தீட்சண்யா திரைக்கதை மற்றும் வசனம் எழுதவுள்ளார். இதர நடிகர்-நடிகைகள் விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com