விரைவில் 'வடசென்னை பாகம் 2'- அட்டேட் கொடுத்த ஐசரி கணேஷ்

இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்தை எப்போது இயக்குவார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
விரைவில்  'வடசென்னை பாகம் 2'- அட்டேட் கொடுத்த ஐசரி கணேஷ்
Published on

சென்னை,

'பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசூரன்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்தை எப்போது இயக்குவார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வட சென்னை 2ம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அப்டேட் கொடுத்த ஐசரி கணேஷ்

அதாவது, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இத்திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட, ஒரு வித்தியாசமான கதைகளத்தைக் கொண்ட படமாக இருக்கும். படம் குறித்த கூடுதல் விவரங்களை இப்போது வெளியிட முடியாது என்றார். மேலும், இந்தத் திரைப்படத்தை முழுமையாக முடித்த பிறகு, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'வடசென்னை பாகம் 2' திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளோம். என்று தெரிவித்துள்ளார். தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com