முதல்முறையாக 600 திரைகளில்... பிரமாண்டமாக வெளியாகும் 'வடக்குப்பட்டி ராமசாமி'

'வடக்குப்பட்டி ராமசாமி' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முதல்முறையாக 600 திரைகளில்... பிரமாண்டமாக வெளியாகும் 'வடக்குப்பட்டி ராமசாமி'
Published on

சென்னை,

'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் சந்தானம் நடித்த படங்களிலேயே அதிக திரையில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை வடக்குப்பட்டி ராமசாமி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் உலகமுழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com