வடிவேலு பிறந்தநாள்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'மாரீசன்' படக்குழு

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி, புதிய போஸ்டரை வெளியிட்டு ‘மாரீசன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
வடிவேலு பிறந்தநாள்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'மாரீசன்' படக்குழு
Published on

சென்னை,

தனது காமெடியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வடிவேலு. பின்பு ஹிரோவாகவும் நடித்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இன்று வடிவேலுவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் 'வைகைப்புயல்' என்று அழைக்கப்படுகிறார். வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அந்த வகையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்த.சியுடன் நடிப்பதாக கேங்கர்ஸ் பட அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது.

தற்போது 'மாரீசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி, புதிய போஸ்டரை வெளியிட்டு 'மாரீசன்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அப்போஸ்டரில் படத்தின் கதாபாத்திர லுக்கில் வடிவேலு இடம்பெற்றுள்ளார். மேலும் ஊர் முழுக்க கொண்டாட்ட மனநிலையில் இருப்பது போல அமைந்திருக்கும் அப்போஸ்டரில் மக்களுக்கு நடுவில் வடிவேலு சிரித்தபடி இருக்கிறார்.

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'மாரீசன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'ஆறு மனமே' படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'வில்லாலி வீரன்' படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலுவும், பஹத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com