கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் வடிவேலு!

கார்த்தியின் 29-வது படத்தை டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் வடிவேலு!
Published on

சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்தித்துள்ளார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன், விருமன், சர்தார்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, நடிகர் கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 'சார்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டராக படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தியின் 29-வது படத்தில் நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com