'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற ஜனவரி 6-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com