வைபவ் படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட தடை?

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். இதில் வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வைபவ் படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட தடை?
Published on

ஆர்.கே.நகர் படத்தை சரவண ராஜன் இயக்கி உள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிந்து நாளை (12-ந் தேதி) இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர்.

இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு படத்தை திரையிட தடை விதித்துள்ளதாகவும், இதனால் ரிலீசை தள்ளிவைத்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெங்கட் பிரபு பேசி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

எனது தயாரிப்பில் உருவான ஆர்.கே.நகர் திரைப்படத்தை 12-ந் தேதி (நாளை) ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இந்த படம் எதிர்பாராத சில காரணங்களினால் தேர்தலுக்கு பின்னர்தான் ரிலீசாக உள்ளது. இந்த படம் ஒரு அரசியல் படம் இல்லை. இருப்பினும் தேர்தலுக்கு பிறகு வெளியிடுமாறு எங்களிடம் கூறப்பட்டது.

இதுகுறித்து நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. நாங்கள் செய்யாத ஒரு தவறுக்காக இந்த படத்தின் ரிலீசை தள்ளிவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com