முதல்-அமைச்சரை சந்தித்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கிய வைரமுத்து


முதல்-அமைச்சரை சந்தித்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கிய வைரமுத்து
x
தினத்தந்தி 23 Jun 2025 6:15 PM IST (Updated: 23 Jun 2025 6:16 PM IST)
t-max-icont-min-icon

கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்ற நூலை எழுதியுள்ளார்.

சென்னை,

திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, "'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். ஜூலை மாதம் நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நூலை வெளியிடு உள்ளார் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 More update

Next Story