'வணங்கான்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'வணங்கான்' படத்தின் டிரைலர் விரைவில் வெளீயிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வணங்கான்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது.

இந்த நிலையில், இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com