லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ரூ. 2.50 கோடி நஷ்டஈடு கேட்கும் வனிதா

வனிதா, தன்னை களங்கப்படுத்தியதாக ரூ.2 கோடியே 50 லட்சம் இழப்பீடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ரூ. 2.50 கோடி நஷ்டஈடு கேட்கும் வனிதா
Published on

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தது சர்ச்சையானது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் அவரை வனிதா மணந்தது தவறு என்றும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் விமர்சித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணனும் வனிதாவும் இணைய தள நேரலை நிகழ்ச்சியொன்றில் உரையாடியபோது வாடி போடி என்றும் அவதூறான வார்த்தைகள் பேசியும் மோதிக்கொண்டனர். டுவிட்டரிலும் காரசாரமாக பேசினார்கள்.

இதையடுத்து வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.1 கோடியே 25 லட்சம் நஷ்ட நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதனை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வனிதா தனது சொந்த வாழ்க்கையில் தலையிட்டது மட்டுமன்றி நஷ்ட ஈடு கேட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் மிரட்டுகிறார் என்றார். இந்த நிலையில் தற்போது வனிதாவும் தன்னை களங்கப்படுத்தியதாக ரூ.2 கோடியே 50 லட்சம் இழப்பீடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதையடுத்து இவர்கள் மோதல் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com