வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" ரிலீஸ் தேதி வெளியீடு

வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" ரிலீஸ் தேதி வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து 'தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி' என பல படங்களில் நடித்துள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதற்கிடையில், இவர் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அறிமுக டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. வனிதா விஜயகுமார் நடித்துள்ள 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் டிரெய்லர் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

View this post on Instagram

இந்நிலையில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி கொண்ட போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார். திரைப்படம் வரும் ஜூலை 4 ம் தேதி வெளியாகிறது. வனிதா விஜயகுமார் அவரது மகள் ஜோவிகா மற்றும் படக்குழு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com