சவாலான வேடங்களை விரும்பும் வரலட்சுமி

"நான் எப்போதும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்" என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சவாலான வேடங்களை விரும்பும் வரலட்சுமி
Published on

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வில்லி வேடங்களையும் ஏற்கிறார்.

தற்போது 'மேன்ஷன் 24' என்ற வெப் தொடரில் சத்யராஜுடன் இணைந்து நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் வரலட்சுமி சரத்குமார் பங்கேற்று பேசும்போது, "நான் எப்போதும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

'மேன்ஷன் 24' வெப் தொடரில் அப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதில் நான் தந்தையை தேடி செல்லும் மகளாக நடித்துள்ளேன். நான் பேய்கள் இருக்கிறது என்றால் நம்பமாட்டேன். ஆனால் இந்த வெப் தொடரை பார்த்த பிறகு எனக்குள் பயம் ஏற்பட்டு உள்ளது.

சத்யராஜ் சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் வீட்டில் இரவு நேரத்தில் பேய் படங்கள் பார்க்க மாட்டேன். எனவே பகல் நேரத்திலேயே இந்த தொடரை பார்க்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com