திருப்பதி கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்த வரலட்சுமி சரத்குமார்


திருப்பதி கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்த வரலட்சுமி சரத்குமார்
x
தினத்தந்தி 8 Jun 2025 8:02 AM IST (Updated: 23 July 2025 9:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி,

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ் தம்பதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

1 More update

Next Story