

நிஜார் டைரக்டு செய்யும் முதல் தமிழ் படத்துக்கு, கலர்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில், புதுமுகம் ராம்குமார் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். வரலட்சுமி சரத்குமார், இனியா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய வேடத்தில், நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்கிறார்.
வினாடிக்கு வினாடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பயங்கர திகில் படமாக கலர்ஸ் தயாராகி வருகிறது. எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைக்கிறார். ஆஷி இட்டிகுலா தயாரிக்கிறார். படப்பிடிப்பு கேரளாவில் நடை பெறுகிறது.