

சென்னை,
'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.
. தொடர்ந்து 'தாரை தப்பட்டை', 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி-2', 'சர்க்கார்', 'மாரி-2', உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார், 'நான் பார்த்த முதல் இரண்டு ஐ.பி.எல். போட்டிகளின் டிக்கெட்டுகளை வாங்கி கொடுத்தது தளபதி விஜய்தான்' என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளிவந்த 'சர்கார்' படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய், 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.