“வாரணாசி” புராணம் மற்றும் பேண்டஸி கலந்த கதை - ராஜமவுலி

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
“வாரணாசி” புராணம் மற்றும் பேண்டஸி கலந்த கதை  - ராஜமவுலி
Published on

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி திரைப்படம் உலக அளவில் வெளியாகவுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து, கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்தப் படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதன் அறிமுக டீஸரை முன்வைத்து, இப்படத்தின் கதை சயின்ஸ் பிக்சன் கலந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் ராஜமவுலி .அதில் ‘வாரணாசி’ படத்தின் கதையில் சயின்ஸ் பிக்சன் கிடையாது. இது புராணம் மற்றும் பேண்டஸி கலந்த கதை என்று கூறியிருக்கிறார். மேலும், பிரித்விராஜ் உட்கார்ந்திருக்கும் சேரை முன்வைத்து இந்த மாதிரி விஷயங்கள் வெளியாகின்றன. அது கதையில் அவரது கதாபாத்திரத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் ராஜமவுலி.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com