

சென்னை,
நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லாவண்யா திரிபாதி குழந்தையை மடியில் அணைத்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தை வருண் தேஜ் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
தற்போது வருண் தேஜ் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திகில்-நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் லாவண்யா திரிபாதி ''தணல்'', ''சதி லீலாவதி'' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
View this post on Instagram