வருண் தேஜுக்கு ஜோடியான 'ஹாய் நான்னா' பட நடிகை


Varun Tej’s VT15 begins its regular shoot
x

தற்போது ஹாரர் காமெடி பக்கம் திரும்பி இருக்கிறார் வருண் தேஜ்.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகை வருண் தேஜ். இவர் சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால், ஆக்சன், பீரியட் டிராமாக்களில் இருந்து விலகி, தற்போது ஹாரர் காமெடி பக்கம் திரும்பி இருக்கிறார். வருண் தேஜ், இந்தோ-கொரிய திகில்-காமெடி படமான விடி15 படத்தில் நடிக்கிறார்.

மெர்லபாகா காந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இதில், கொரியன் கனகராஜு என்ற கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். ஹாய் நானா பட நடிகை ரித்திகா நாயக் கதாநாயகியாக நடிக்கிறார்.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.

1 More update

Next Story